"ஒரு நாளைக்கே இவ்ளோவா?".. கொரோனா சிகிச்சைக்கு சென்னை தனியார் மருத்துவமனைகளில் கொள்ளை கட்டணங்கள்.. ரமணா பாணியில் வெளியான பரபரப்பு வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாசென்னையின் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு ஆகும் செலவுகள் பற்றி ரிப்போர்ட்டர் ஒருவர் நோயாளியின் உறவினர் போல் சென்று விசாரித்ததில் மருத்துவ ஊழியர்கள் கூறும் பதில்களை மறைமுகமாக வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த வீடியோவில் டைம்ஸ் நவ் ரிப்போர்ட்டர், அந்த தனியார் மருத்துவ ஊழியரிடம், “மேடம், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து என் நண்பரின் தந்தையை இங்கு கொண்டு வந்து சேர்க்க நினைக்கிறோம், சிகிச்சைக்கு ஆகும் செலவு என்னவென்று சொல்ல முடியுமா?” என்று கேட்கிறார், அந்த மருத்துவ ஊழியர், “என்ன பிரச்சனை அவருக்கு?” என்று கேட்க, “கோவிட்-19 பாசிடிவ் நோயாளி” என்று சொல்கிறார்.
மீண்டும அந்த மருத்துவ ஊழியர், “ஓ.. நீங்க இங்க கூட்டிட்டு வரலாம். ரிசல்ட் வந்துடுச்சா?” என்று கேட்க, “ரிசல்ட் வந்துடுச்சு.. பாசிடிவ்தான்.. ஆனால் அவருக்கு லேசான அறிகுறிகளே உள்ளன” என்று சொல்கிறார். அந்த மருத்துவ ஊழியர், “அப்படினா இங்க 14 நாட்கள் தனிமைப்படுத்துவாங்க. நோயாளியின் நிலையை பொருத்து 10 நாட்களில் கூட டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க” என்று சொல்ல, அதற்கு ரிப்போர்ட்டர், “சிலர் ஐசியுவில் வைப்பதாக சொல்கிறார்கள்!” என்று கொக்கியை போட, “ஐசியுவில் இடமில்லை சார்” என்று மருத்துவ ஊழியர் கூற, மீண்டும் ரிப்போர்ட்டர், “நாங்கள் ஏதேனும் அட்வான்ஸ் கட்டணுமா?” என்று கேட்க, “எனக்கு தெரிஞ்சு 3 லட்சம் பேக்கேஜாக வரும்” என்கிறார் மருத்துவ ஊழியர்.
மேலும், ஐசியு என்றால் பணம் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆகும், அதாவது ஒருநாளைக்கு 1 லட்சம் ரூபாய் ஆகும் என்றும், அட்வான்ஸே 1 லட்சம் ரூபாய் ஆகும் என்றும், இதெல்லாம் கேஷ்லெஸ் இன்சூரன்ஸில் கவர் ஆனாலுமே, மருத்துவ உபகரணங்களுக்கான செலவுகள் உட்பட 1 லட்சம் ரூபாய் வரை தனியாக பணம் கட்டியாக வேண்டியதிருக்கும் என்றும் மருத்துவ ஊழியர் கூறுகிறார். இதையெல்லாம் கேட்டுவிட்டு ரிப்போர்ட்டர்,
EXPLOSIVE #EXCLUSIVE | TIMES NOW STING OPERATION EXPOSES 'CASH FOR CURE' SCAM.
Watch: Hospital 2, Chennai – Official said roughly Rs 3 lakh must be paid as advance for Covid-19 package treatment. Extra charges will be taken for ICU.
Sting by Shabbir. | #CovidForProfitScam pic.twitter.com/jsQAS39Ggy
— TIMES NOW (@TimesNow) May 29, 2020
“பொருளாதார ரீதியாக எப்படி என்று பார்த்துக்கொண்டு நாங்கள் வருகிறோம். இல்லையென்றால் நந்தம்பாக்கம் மருத்துவமனையில் பார்த்துக்கொள்கிறோம்!” என்று முடித்துக்கொண்டு நகர்கிறார்.