ஒரு 10 பேரு... 'முகமூடி'ய போட்டுக்கிட்டு, கையில 'கத்தி'யோட... 'தீரன்' படத்துல வர்றது மாதிரி வந்திருக்காங்க... திடுக்கிடும் 'கொள்ளை' சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டுக்கல் மாவட்டம், தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் முருகசாமி. விவசாயியான இவர் தோட்ட வீட்டில் வசித்து வருகிறார்.
![Theft in Dindugal happened as like in the theeran movie Theft in Dindugal happened as like in the theeran movie](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/theft-in-dindugal-happened-as-like-in-the-theeran-movie.jpg)
இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மொத்தமாக ஏழு பேருடன் முருகசாமி வசித்து வந்துள்ள நிலையில், அனைவரும் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது பத்துக்கும் மேற்பட்ட முகமூடிக் கொள்ளையர்கள் முருகசாமியின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். இரவு நேரத்தில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டதால் அனைவரும் எழுந்த நிலையில் அவர்கள் அனைவரின் கழுத்திலும் கத்தியை வைத்து கொள்ளையர்கள் மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து நாயை கத்தியைக் கொண்டு தாக்கியுள்ளனர். வீட்டில் நகைகள் எதுவும் இல்லாத நிலையில் அங்கிருந்த பெண்களின் கிடந்த சுமார் 20 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். இந்த பகுதியில் விவசாயிகள் பெரும்பாலும் தோட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர். ஒரு தோட்ட வீட்டிற்கும் மற்ற தோட்ட வீட்டிற்கும் அதிக தூரம் இடைவெளி இருக்கும். இந்த சம்பவம் அப்பகுதி விவசாய மக்களிடையே மிகப்பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
கொள்ளையர்களை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீவிர நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)