'அடங்காத வெட்டுக்கிளிகள்...' 'என்னென்னமோ பண்ணி பாக்குறாங்க...' '35.000 பேர் சாப்பிடுறத ஒரே நாளில்...' வேதனையில் விவசாயிகள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | May 14, 2020 01:56 PM

பாகிஸ்தானிலிருந்து படையெடுத்து வந்த வெட்டுக்கிளிகளால் ராஜஸ்தான் விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்த சம்பவம் அவர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கி உள்ளது.

Farmers agonize over destruction of crops by grasshoppers

ஆண்டுதோறும் பாகிஸ்தானில் இருந்து கூட்டம் கூட்டமாக படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் ராஜஸ்தான் விவசாயிகள் திண்டாடுவார்கள். அதே போல இந்த ஆண்டும்  விவசாயிகளை திக்குமுக்காட வைத்துள்ளது பல்லாயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள்.

மே மாதத் தொடக்கத்திலிருந்து பாகிஸ்தானுக்குள் இருந்து எல்லை தாண்டி கூட்டம் கூட்டமாக ராஜஸ்தானுக்கு படையெடுத்து வந்த வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான் விவசாயிகளின் நிலத்தை சூறையாடி உள்ளது.

முதலில் எல்லையோர மாவட்டங்களுக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள், தற்போது ஊருக்குள் இருக்கும் விவசாய நிலங்களின் பயிர்களையும்,. இலை, பூ, பழம், காய், தண்டு என எல்லாவற்றையும் தின்று தீர்க்கத் தொடங்கிவிட்டன.

இந்த வெட்டுக்கிளி படை ஒரு சதுர கிலோ மீட்டருக்குள் 40 லட்சம் வெட்டுக்கிளிகள் வரை வந்திறங்கினால், அவை ஒருநாளில் சுமார் 35 ஆயிரம் பேர் சாப்பிடும் அளவுக்கு தாவரங்களை தும்சம் செய்துவிடும் என கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

மேலும் வெடி வெடித்து, தகரம் மற்றும் அலுமினியப் பொருட்களை தட்டி ஒலி எழுப்பி இந்த வெட்டுக்கிளிகளை விரட்டி வருகின்றனர் விவசாயிகள். அரசும் பூச்சி மருந்து தெளித்து வெட்டுக்கிளிகளை அழிக்க முயற்சி செய்து வருகிறது. இருப்பினும் வெட்டுக்கிளிகள் கட்டுக்குள் வருவதாக தெரியவில்லை.

மேலும் இந்த வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாக ராஜஸ்தான் அரசு சுமார் 84 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் கடந்த ஆண்டு 3 லட்சத்து 40 ஆயிரம் ஹெக்டேரில் விளைந்த பயிர்களை தின்று தீர்த்த வெட்டுக்கிளிகள் இந்த ஆண்டும் அந்த அளவுக்கு சூறையாடும் என விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.