'பாகிஸ்தானில்' காணாமல் போன... இந்திய 'தூதரக' அதிகாரிகள்... பரபரப்பை கிளப்பிய சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வரும் இந்தியாவை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்களது இருப்பிடத்தில் இருந்து பணிக்கு கிளம்பி சென்ற இவர்கள் இருவரும் பணியிடம் சென்று சேரவில்லை. இரண்டு சி.ஐ.எஸ்.எப் ஓட்டுனர்கள் காணாமல் போனது குறித்து பாகிஸ்தானிடம் இந்திய அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய தூதரக அதிகாரிகள், பாகிஸ்தான் உளவு அமைப்பால் சமீப காலமாக உளவு பார்க்கப்படுவதாக புகார்கள் அதிகரித்து வந்தது.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன், இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இரண்டு பேர் உளவு பார்த்ததாக இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர்கள் மீது இந்திய அரசு நடவடிக்கையும் எடுத்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஏதேனும் நடந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதனையடுத்து, இந்தியாவை சேர்ந்த இரண்டு சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் பாகிஸ்தானில் காணாமல் போன சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மற்ற செய்திகள்
