'பிசினஸ்' பண்றானாம்ல 'பிசினஸ்'... "புடிச்சு உள்ள போடுங்க சார்"... 'யூடியூப்' பார்த்து திருடியவரின் 'பகீர்' பின்னணி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கொளத்தூர் அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் 14 - ம் தேதியன்று வீடு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த சுமார் 40 சவரன் தங்க நகைகள் மற்றும் 48,000 ரூபாய் கொள்ளை போனது தெரிய வந்தது.
இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் புகாரளித்த நிலையில், போலீசார் விசரணையை மேற்கொண்டனர். அந்த வீட்டின் பகுதியில் இருந்த சிசிடிவியை ஆய்வு செய்த போது நீல நிறை சட்டை அணிந்த நபர் ஒருவர் பூட்டிய வீடுகள் அனைத்தையும் நோட்டமிட்டு கொண்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து அவர் சென்ற வழியிலுள்ள சுமார் 80 சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் இறுதியில், அந்த சந்தேகத்திற்கு இடமான நபர் வசிக்கும் பகுதியை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அவரின் வீட்டில் சென்ற போலீசார், அங்குள்ளவர்களிடம் நகை கொள்ளை குறித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அந்த வீட்டின் தலைவன் சக்திவேல் என்பவரை போலீசார் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அப்போது தான் கொரியர் கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும், நகைகளைத் தான் திருடவில்லை எனவும் அப்பாவி போல் தெரிவித்துள்ளார். அவரது உடலில் சிறிது பதற்றம் ஏற்பட, போலீசார் விசாரணையை கடுமனையாக்கினர். இதில் தான் நகையை திருடியதை சக்திவேல் ஒப்புக்கொண்டார்.
கொரியர் கம்பெனியில் பணிபுரிந்து வந்த சக்திவேலுக்கு குதிரை பந்தயம் மீதுள்ள ஈர்ப்பு காரணம் அதில் பணத்தை சம்பாதிக்க எண்ணி, தனது சம்பளம், மனைவியின் நகைகள், பைக் என அனைத்தையும் இழந்துள்ளார். தன்னிடம் இருந்த வேலையும் இதன் காரணமாக பறிபோனது. இதனால் யூ டியூப் பார்த்து வேலைவாய்ப்புகளை தேடிய போது திருட்டு தொடர்பான வீடியோக்களை பார்த்துள்ளார். அதில் திருடுவது எப்படி என பார்த்த சக்திவேல், திருட முடிவு செய்ததன் பெயரில் கொளத்தூர் பெயரில் டிப் டாப்பாக சென்று திருடுவதற்காக பூட்டிய வீடுகளை நோட்டமிட்டுள்ளார்.
யூ டியூபில் கற்றுக் கொண்டதன் மூலம் கோபாலகிருஷ்ணனின் பூட்டிய வீட்டை எளிதாக திறந்து கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளார். இதன்பின்னர், போலீசார் நடத்திய ஆய்வில் சக்திவேல் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். திருடிய பணத்தை செலவு செய்த போது சக்திவேலின் குடும்பத்தினர், இவ்வளவு பணம் எப்படி வந்தது என கேட்டபோது நீங்கள் பணம் இல்லையென்று என்னை குறை கூறி கொண்டிருந்தீர்கள். அதனால் தான் பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளதாக சக்திவேல் கூறியுள்ளார்.
போலீசார் சக்திவேலின் வீட்டிற்கு சென்று அவர் ஒளித்து வைத்திருந்த நகையினை மீட்டனர். சக்திவேல் திருடன் என தெரிந்ததும் அவரது மனைவி மற்றும் தாயார் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சோம்பேறியை பிடித்து ஜெயிலில் போடுங்க எனவும் தெரிவித்துள்ளனர்.