மூணு பைக்குல '8 பேரு'... கூடவே 3 'கத்தியும்' இருந்துருக்கு... அத 'வெச்சு' தான்... சென்னை கொள்ளையர்களின் 'பகீர்' பின்னணி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியிலுள்ள பருவா நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அறம்மாள். இவர் தனது வீட்டின் அருகேயுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்த போது எட்டு பேர் அங்கு வந்துள்ளனர்.
பின்னர் ரத்தம் படிந்த கத்தியை அந்த எட்டு பேரில் ஒருவர், தண்ணீர் குழாயில் கழுவியுள்ளார். அப்போது குடிப்பதற்கே தண்ணி இல்லை, இதில் கத்தியை வேறு கழுவுவதா என கூறி அறம்மாள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் தகராறு ஏற்பட, அந்த எட்டு பேரில் ஒருவர் அறம்மாளை பின்தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்று சரமாரியாக வெட்டியுள்ளார். அப்போது தடுக்க முயன்ற அறம்மாள் மகனையும் அந்த நபர் வெட்டிவிட்டு 8 பேரும் தப்பியோடியுள்ளனர்.
ரத்தவெள்ளத்தில் கிடந்த அறம்மாள் மற்றும் அவரது மகனை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அந்த 8 பேரும் தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த ரௌடிகள் என்பது தெரியவந்தது.
பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் நடத்திய விசாரணையில், மூன்று பேர் தஞ்சாவூர் தப்பியோடி சென்று விட்டதாகவும், ஒருவர் திண்டிவனத்தில் தப்பி சென்றதாகவும் கண்டறியப்பட்டது. பின்னர் அந்த நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். இறுதியில், தேனாம்பேட்டை பகுதியில் பதுங்கியிருந்த மீதி நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசரணையில், கடந்த 29 ஆம் தேதியன்று 8 பேரும் 3 பைக்குகளில் சென்று தொடர் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். பரங்கிமலை பகுதியில் ஒருவரை அரிவாளால் வெட்டி கொள்ளையடித்த நிலையில், அடுத்ததாக கிண்டி பகுதியில் இருவரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி செல்போனை கேட்டுள்ளனர். அவர்கள் தர மறுக்கவே கத்தியைக் கொண்டு சரமாரியாக வெட்டிவிட்டு செல்போனை பறித்துள்ளனர். இதனை தொடர்ந்து இறுதியில் அறம்மாள் மற்றும் அவரது மகனை வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அந்த 8 பேரிடம் இருந்த 4 செல்போன்கள், 3 கத்தி மற்றும் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த 8 பேர் கொண்ட கும்பல் மீது பல காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, அடிதடி உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.