'பருத்திப் பூக்களை' பதம் பார்த்த 'வெட்டுக்கிளிகள்...' 'நாசமடைந்த 70 ஏக்கர் பயிர்...' 'அச்சத்தில்' தமிழக 'விவசாயிகள்...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்பருத்தி பூக்களை வெட்டுக்கிளிகள் படையெடுத்து தின்றதால் தமிழக விவசாயிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்
பாகிஸ்தான் எல்லையையொட்டிய மேற்கு ராஜஸ்தான் பகுதி வரை மட்டுமே வெட்டுக்கிளிகள் படையெடுப்பு வழக்கமாக இருக்கும் நிலையில், தற்போது அம்மாநிலத்தின் ஜெய்பூர் உள்ளிட்ட நகரங்களின் குடியிருப்பு பகுதிகள், மத்தியப்பிரதேசத்தின் சில பகுதிகள் வரை தற்போது படையெடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் தமிழகத்திற்கு ஆபத்தில்லை என தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது. ஒருவேளை தாக்குதல் ஏற்பட்டால் அவற்றை கட்டுப்படுத்தி கையாள்வதற்கான வழிமுறைகளையும் வேளாண் துறை வெளியிட்டுள்ளது. ஆனாலும், தமிழகத்தில் ஆங்காங்கே வெட்டுக்கிளிகள் படையெடுப்பு காணப்படுவதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் திருக்களாச்சேரி அருகே பாலூரில் பருத்தி பூக்களை வெட்டுக்கிளிகள் படையெடுத்து தின்றுள்ளது.
சுமார் 70 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி பூக்களை வெட்டுக்கிளிகள் பதம் பார்த்துள்ளன. இதனால் சாகுபடி பாதிக்கப்படும் என விவசாயகிள் அச்சமடைந்துள்ளனர்.