அண்ணனோட 2 பசங்கள 'கொன்னு'... இன்னும் 3 பேர 'கொல' பண்ண 'பிளான்' போட்ருக்கான்... நடுங்க வைக்கும் 'காரணம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்திலுள்ள தரம்பூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ராதே ஷியாம். இவர் சில தினங்களுக்கு முன் தனது அண்ணன் விஷ்வநாத் சிங் உறங்கிக் கொண்டிருந்த போது அவரை கொல்ல முயன்றுள்ளார்.

அப்போது மற்ற உறவினர்கள் ஷியாமை மடக்கி பிடித்து அவரது அண்ணனை மீட்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் ராதே ஷியாமிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த பிப்ரவரி மாதம் தனது உடன் பிறந்த சகோதரரின் ஆறு வயது மகனை கொலை செய்துள்ளார். அதே போல, கடந்த ஜூன் 9 ஆம் தேதியன்று தனது உறவினர் ஒருவரின் மகனையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
மேலும், இப்படி கொலை செய்வது தனக்கு பிடித்திருக்கிறது என்றும், இன்னும் மூன்று பேரை தான் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் ராதே ஷியாம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார், கொலை செய்வதில் ஆனந்தம் கொள்ளும் சைக்கோ கொலையாளி ராதே ஷியாம் என தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இரண்டு சிறுவர்களின் கொலை வழக்கில் மூன்று பேரை போலீசார் சிறை வைத்திருந்தனர். தற்போது ராதே ஷியாம் சிறுவர்களை தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ள நிலையில், மற்றவர்களை போலீசார் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்வதில் விருப்பம் கொண்டு தனது உறவினர்களின் மகன்களையே வாலிபர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
