‘தோனி வயசு என்ன அவரு ரிடையர்டு ஆகிட்டாரா?’ ‘இவர மட்டும் ஏன் கேக்கறீங்க’..‘வறுத்தெடுத்த பிரபல வீரரின் மனைவி’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Oct 21, 2019 06:49 PM
சர்பிராஸ் அகமதுவின் ஓய்வு குறித்த கேள்விக்கு அவருடைய மனைவி காட்டமாக பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட், டி20 போட்டிக்கான கேப்டன் பதவியிலிருந்து சர்பிராஸ் அகமது நீக்கப்பட்டார். மேலும் அவர் ஆஸ்திரேலியாவுக்கான அணியிலும் இடம்பெறவில்லை. இதைத்தொடர்ந்து 32 வயதாகும் சர்பிராஸ் கிரிக்கெட்டிலிருந்து விரைவில் ஓய்வை அறிவிக்க உள்ளார் எனத் தகவல் வெளியானது.
இதுகுறித்து நிருபர்கள் சர்பிராஸ் அகமதுவின் மனைவியிடம் கேட்க அதற்கு அவர், “என் கணவர் ஏன் இப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும். அதற்கு என்ன தேவை இருக்கிறது. தோனிக்கு என்ன வயதாகிறது, அவர் இன்னும் விளையாடிக்கொண்டு தானே இருக்கிறார். அவர் என்ன ஓய்வு பெற்று விட்டாரா? என்னுடைய கணவர் இந்த சரிவிலிருந்து மீண்டு வலிமையுடன் திரும்பி வருவார்.
கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதால் சர்பிராஸ் நம்பிக்கை இழந்து விடவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். இனிமேல் அவர் எந்த சுமையும், அழுத்தமும் இல்லாமல் விளையாடுவார்” எனத் தெரிவித்துள்ளார்.
