ஒண்ணுக்கு '3' பொண்டாட்டி இருக்கோம்...! 'கட்டினா அவர தான் கட்டிப்பேன்...' ' இப்படி விட்டா சரி வராது, போட்ருவோம்...' அதிர வைக்கும் வாக்குமூலம்....!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Apr 21, 2020 11:11 AM

3 மனைவிகள் போதவில்லை என்று நான்காவதாக திருமணம் செய்ய விரும்பிய பைனான்சியர் உதயகுமார் வெட்டி கொலை செய்யப்பட்ட காரணம் போலீஸ் விசாரணையில் வெளிவந்துள்ளது.

The murder of the financier wanted to marry the fourth

கடந்த இரு நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பைனான்சியர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட காரணத்தைப் பற்றிய விரிவான செய்திகளை போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

38 வயதான பைனான்சியர் உதயகுமார் என்பவர் தன் மூன்று மனைவிகளுடன் வேலூர்மாவட்டம் கொசப்பேட்டை சுந்தரேச சாமிகோவில் மாணியம் பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். இவரின் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட ஏராளமான அடிதடி வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

3 மனைவிகள் இருந்து வேறொரு பெண்ணுக்கு ஆசைப்பட்ட உதயகுமாரின் மாய வலையில் சிக்கியுள்ளார் நவீன்குமார் என்பவரின் உறவுக்கார பெண் ஒருவர். உதயகுமார் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிய அந்த பெண் அவர் மீது கொண்ட அதீத காதலினால் திருமணம் செய்தால் உதயகுமாரைத்தான் திருமணம் செய்வேன் என்று அடம்பிடித்து வந்துள்ளார்.

இதனை அறிந்த அப்பெண்ணின் உறவினர்கள், உதயா தங்கள் வீட்டு பெண்ணின் மனதை கெடுத்து விட்டதாக கடுமையான ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. மேலும் திருமணம் செய்து தன் காதலில் வெல்லவேண்டும் என்று நினைத்த அந்த இளம் பெண் யாருக்கும் வீட்டை விட்டு ஓடி வந்து உதயாவின் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். ஏற்கனவே உதயாவின் வீட்டில் இருந்த மூன்று மனைவிகள் அந்த பெண்ணுக்கு புத்தி சொல்லி அவரது வீட்டிற்கே அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் மேலும் கோபம் அடைந்த நவீன் தங்கள் வீட்டுப்பெண் ரவுடிக்கு 4-வது மனைவியாகி விடக்கூடாது என்ற ஆத்திரத்தில் தன் கூட்டாளிகளோடு இணைந்து, உதயாவை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

மேலும் நவீன் மற்றும் அவரது கூட்டாளிகள் வெளியூருக்கு தப்பி செல்ல முயன்றுள்ளனர் ஆனால் தப்பி ஓடிய கும்பல் வாகனத்தில் வெளியூர் செல்ல வழியில்லாததால் காவல்துறையினருக்கு போன் செய்து தாங்கள் சரணடைய விரும்புவதாக தெரிவித்தனர்.

சரணடைந்த குற்றவாளிகள் போலீசாரின்  விசாரணையில் பைனான்சியர் உதயகுமார் வெட்டி கொலை செய்யப்பட்ட காரணத்தை கூறியுள்ளனர்.

Tags : #MARRIAGE