‘சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள’... ‘முன்னாள் முதல்வரின் மகன் திருமணம்’...'துணை முதல்வர் எச்சரிக்கை’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 17, 2020 08:25 PM

கொரோனா ஊரடங்கிறகு மத்தியில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, தனது மகன் திருமணத்தை உறவினர்களை கூட்டி, சமூக விலகலை கடைப்பிடிக்காமல் நடத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

EX CM HD Kumaraswamy\'s Son\'s Wedding Sparks Controversy

ஊரடங்கு சமயத்தில் திருமணங்கள், இறுதிச் சடங்குகள் போன்றவற்றை 20 பேர்களுக்கு மேல் கூடாமல் நடத்த வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி, முன்னாள் அமைச்சர் ஒருவரின் பேத்தியான ரேவதியை இன்று திருமணம் செய்தார்.

கொரோனா பரவலால், பெங்களூரு சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டதால், குமாரசாமி தனது சொந்த தொகுதியான ராமநகராவில் உள்ள பண்ணை வீட்டிற்கு திருமணத்தை மாற்றினார். அங்கு, உறவினர்கள் சூழ, சடங்கு சம்பிராதயங்களுடன் பண்ணை வீட்டில் நடந்த திருமணத்திலும், சமூக விலகல் கடைப்பிடிக்கப்படாதது திருமண புகைப்படங்களில் தெரிந்ததாகப் புகார் எழுந்துள்ளது. மேலும் விழாவில் பங்கேற்ற யாரும் முகக்கவசங்களும் அணியவில்லை என்றும் தெரிகிறது.

இது பரபரப்பாக பேசப்பட்டநிலையில், இது குறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாரயண் “குமாரசாமி வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் என அறிவித்திருந்தார். அவர் நீண்ட காலமாக பொது வாழ்வில் உள்ளார். முதல்வராகவும் இருந்துள்ளார். நிகில் திருமணம் குறித்து ராம்நகர் இணைக் காவல் கண்காணிப்பாளரிடமிருந்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. குமாரசாமி வழிகாட்டுதல்களை பின்பற்றாதது தெரிந்தால், இரண்டாவது யோசனையின்றி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.