'மும்பையிலிருந்து தாலி கட்டிய மணமகன்...' 'டெல்லியிலிருந்து தாலி கட்டிக் கொண்ட மணமகள்...' 'துபாய், கனடா, ஆஸ்திரேலிய' நாடுகளிலிருந்து 'மலர் தூவிய' உறவினர்கள்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Apr 07, 2020 09:56 AM

நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால் மும்பையைச் சேர்ந்த மணமகனுக்கும், டெல்லியைச் சேர்ந்த மணமகளுக்கும் வீடியோ கால் மூலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

Mumbai boy, Delhi girl tie the knot via video calling

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், பல்வேறு திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த 29 வயதான வணிகக் கடற்படை அதிகாரியான ப்ரீத் சிங் என்பவருக்கும் டில்லியை சேர்ந்த நீத் கவுர் என்ற பெண்ணுக்கும் வீடியோ கால் மூலமாக நடைபெற்ற திருமணம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இருவருக்கும் ஏப்ரல் 4ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர்களின் உறவினர்கள் துபாய், கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வர முடியாமல் தவித்துள்ளனர். இதனால் திருமணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், அனைவரும் வீடியோ கால் மூலம் இணைந்து ப்ரீத் சிங் - நீத் கவுர் திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்தனர். அதன்படி, திருமணம் செய்ய தயாரான ஜோடிகள் அவரவர் வீட்டில் திருமண அலங்கார உடைகளுடன் தயாராக இருந்தனர். பின்னர் உறவினர்கள் வீடியோகால் மூலம் இணைய அவர்களது ஆசிர்வாதத்துடன் திருமணம் நடைபெற்றது. நிலைமை சீரடைந்த பிறகு சீக்கிய முறைப்படி திருமண விழா நடத்தப்படும் என அவர்கள் குறிப்பிட்டனர்.