'அம்மா தர்மம் போடுங்க'... 'ரோட்டில் பிச்சை எடுக்கும் 'பிரபல தொழிலதிபர்'...அசர வைக்கும் காரணம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரபல சுவீடன் தொழிலதிபர் கோவையில் பொதுமக்களிடம் பிச்சை கேட்டுச் சுற்றித்திரிவது அவ்வூர் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்காக அவர் கூறிய காரணம் தான் ஆச்சரியத்தின் உச்சம்.
சுவீடன் நாட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபரான கிம், மன நிம்மதிக்காகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கோவையிலுள்ள ஈஷா யோகா தியான மையத்திற்கு வந்துள்ளார். அங்குத் தியானம் செய்த அவர், அங்குள்ள ஏழை மக்களுக்குப் பல உதவிகளைச் செய்துள்ளார். ஆனாலும் அவருக்கு ஏனோ மனநிம்மதி கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்களிடம் இரு கைகளையும் கூப்பி வணக்கம் வைத்து அவர்களிடம் யாசகம் கேட்டுப் பெற்று வருகிறார்.
ரயில் நிலையத்திற்கு வரும், பொதுமக்களுக்கு வணக்கம் வைக்கும் அவர், அவர்கள் கொடுக்கும் 5 ரூபாய், 10 ரூபாய்களைப் பெற்றுக்கொண்டு அதை வைத்து உணவு வாங்கி உட்கொள்கிறார். இப்படிச் செய்யும்போது தான் பூரண மனநிம்மதி கிடைப்பதாக கிம் தெரிவித்துள்ளார். பல கோடிகளுக்கு அதிபதியான தொழிலதிபர் இப்படி மக்களிடம் பிச்சை எடுத்து அதில் கிடைக்கும் பணத்தில் உணவு வாங்கி உண்பது அந்த பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.