‘நாங்க என்னடா பாவம் பண்ணோம்?!’.. குறட்டை பார்ட்டிகளுக்கு கூட பிரச்சனை இல்லையாம்!.. ஆனால் அருகில் இருப்பவருக்கு ‘இப்படி ஒரு ஆபத்தாம்!’.. அதிர்ச்சி தரும் ஆய்வு!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Siva Sankar | Feb 29, 2020 10:12 PM

குறட்டை விடுவது குறட்டை விட்டுக் கொண்டே தூங்குபவர்கள் வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் குறட்டை விட்டுக் கொண்டே தூங்கும் ஒருவரின் அருகில் இருப்பவருக்கு நிச்சயம் அந்த சப்தம் இனிமையாக இருக்கப்போவதில்லை.

குறட்டை சத்தத்தால் ஆபத்து snoring will affect heart and BP

அது என்ன மாயமோ மந்திரமோ குறட்டை விடுபவர்களுக்கு மட்டும் முதலில் தூக்கம் வந்துவிடும். அவர் உறங்கியபின் குறட்டையை சகித்துக் கொள்ள முடியாமல் அவரின் அருகில் இருப்பவர் அவதிப்படுவது காலங்காலமாக நிகழும் கொடூரமாக இருந்து வருகிறது. குறட்டையில் இவ்வளவு விஷயங்கள் நிறைந்திருக்க, ஆனால் குறட்டை சத்தம் நம் காதுகளைத் துளைத்து, தூக்கத்தைக் கெடுத்து, நம் நிம்மதியைக் குலைப்பது மட்டுமின்றி, ரத்த அழுத்தத்தையும், இதய பாதிப்பையும் உண்டாக்கும் என்கிற அதிர்ச்சித் தகவல் சமீபத்திl ஆக்ஸ்ஃபோர்ட் அகாடமி வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த ஆய்வில் குறட்டைவிடுதல் 162 பேர் பரிசோதிக்கப் பட்டதாகவும், பின்னர் அவர்களின் குறட்டைச் சத்தம் 14 சதவீதம் பேருக்கு 53 டெசிபலைத் தாண்டியும், மீதம் இருக்கும் 66 சதவீதத்தினருக்கு  45 டெசிபலாகவும் இருந்ததாகவும் கண்டறியப்பட்டது.  அளவுக்கதிகமான எந்த சத்தமும் தூக்கமின்மையை உண்டாக்குவதோடு இதய பாதிப்பையும் ஏற்படுத்துகிறது என்கிற வகையில், அளவுக்கு அதிகமான சத்தத்தை உண்டுபண்ணும் குறட்டை சத்தமும் இதைச் செய்கிறது என்று 2016ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வு ஊர்ஜிதப்படுத்துகிறது.  இந்த பாதிப்புகளில் இருந்து தவிர்ப்பதற்கும் தப்பிப்பதற்கும் காதில் பஞ்சு அல்லது இயர் ப்ளக் போன்றவற்றை வைத்துக்கொள்ள இந்த ஆய்வுக்குழு அறிவுறுத்தியுள்ளது.

Tags : #SLEEP #SNORING #REPORT