'கல்லூரி' மாணவர்களுக்கு இலவச 'காண்டம்'.. வழங்கிய அமைச்சர்.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Nov 06, 2019 12:03 AM

கல்லூரி மாணவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் காண்டம் வழங்கிய நிகழ்வு அயர்லாந்து நாட்டில் நிகழ்ந்துள்ளது.

Free condoms to be handed out to college students in Ireland

இன்று அயர்லாந்து நாட்டை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் சைமன் ஹாரிஸ் டப்ளினின் ட்ரினிடி கல்லூரியில் இலவச ஆணுறை வழங்கும் சேவையை தொடங்கி வைத்தார். இந்த வாரம் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் இலவச ஆணுறைகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், '' என்னை பொறுத்தவரை பாலியல் துறைக்கு முக்கியத்துவம் அளிப்பதை முன்னுரிமையாக கொண்டுள்ளேன். சமீபகாலமாக இளைஞர்கள் அதிகளவில் பாலியல் நோய்களுக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து ஆய்வுகள் நடத்தியபோது அவர்கள் ஆணுறை வாங்க காசு இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் தேவையற்ற கர்ப்பங்கள் குறையும். ஆணுறை உபயோகப்படுத்தும் ஒவ்வொரு முறையும் பாலியல் நோய்த்தொற்றின் அபாயம் குறைக்கப்படுகிறது. ஆணுறை விநியோகம் செய்பவர்கள் மூலம் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்கிற விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும்,'' என தெரிவித்துள்ளார்.