‘12- வகுப்பு மாணவியை’... ‘வகுப்புக்கு வரச் சொல்லிய ஆசிரியர்’... ‘பொதுமக்கள் செய்த அதிர்ச்சி காரியம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 09, 2019 08:31 PM
12-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, தற்காலிக ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை, விடுமுறை தினமான, கடந்த ஞாயிற்றுகிழமை அன்று வகுப்புக்கு வரும்படி, தற்காலிக ஆசிரியரான சுரேஷ் கூறியிருக்கிறார். இதையடுத்து வகுப்பறைக்கு சென்ற அந்த மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பெற்றோரிடம், அந்த மாணவி கூறியுள்ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பள்ளிக்கு திரண்டு சென்று, ஆசிரியரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அங்குவந்த போலீசார், விசாரணை மேற்கொண்டு, ஆசிரியர் சுரேஷை பைக்கில் அழைத்து செல்ல முயற்சித்தனர். அப்போதும் அப்பகுதி மக்கள் அவரை சரமாரியாக தாக்கியதால் அப்பகுதியில் பரப்பு ஏற்பட்டது.
ஆசிரியர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், ஆசிரியர் சுரேஷ், சாலையில் நின்று மாணவியிடம் பேசியதைப் பார்த்த அந்தப் பகுதி இளைஞர்கள் சிலர், ஆசிரியரிடம் தகராறு செய்ததாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் பாலியல் தொல்லை குறித்த புகார் எதுவும் வரவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த ஆசிரியர் சுரேஷ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீதான புகார் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.