என் ‘உடம்புல’ எங்க இருக்கு?... ‘ஆடையை’ களைந்து நின்ற வீரர்... ‘ஆத்திரத்தில்’ செய்த காரியத்தால் ‘தடை?’.. ‘பரபரப்பு’ சம்பவம்...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉடற்தகுதி சோதனையின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலுக்கு தடை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உமர் அக்மல் உடற்தகுதி போன்ற சில காரணங்களால் சர்வதேச அணியில் விளையாட முடியாமல் உள்ளார். தற்போது அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு உள்ளூர் தொடர்களில் விளையாடும் வீரர்களும் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது.
இந்நிலையில், உமர் அக்மல் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை நிரூபிக்கச் சென்றபோது, சில தேர்வுகளில் தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சோதனையின்போது அவருடைய உடலில் கொழுப்பு அதிகமாக உள்ளதாக உடற்தகுதி பயிற்றுநர் கூறியுள்ளார்.
அதைக் கேட்டு ஆத்திரமடைந்த உமர் அக்மல் தன் உடலில் இருந்த ஆடைகளைக் களைந்து, “என் உடலில் எங்கு இருக்கிறது கொழுப்பு?” எனக் கேட்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் அடுத்த உள்நாட்டுத் தொடரில் முழுவதுமாக தடை செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
