VIDEO: ஜூனியர் 'உலகக்கோப்பையில்'... இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 'வீரர்கள்' செய்த காரியம்... 'கடைசி' வரைக்கும் நீங்க...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஜூனியர் உலகக்கோப்பை போட்டி தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இன்றைய அரையிறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய 43.1 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. வழக்கம்போல பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியிலும், மோசமான தவறுகளை செய்து விரைவாக ஆட்டமிழந்தனர். போட்டியின் 31-வது ஓவரை ரவி பிஸ்னோய் வீசினார். 2-வது பந்தை எதிர்கொண்ட ஹாசிம் அந்த பந்தை தட்டிவிட்டு சிங்கிள் ஓட முயற்சி செய்தார்.
#INDvsPAK Pakistan team running race ,they are really comedians pic.twitter.com/XJ0ZMqPuV0
— ChrisVirat 🇮🇳 (@chris_virat) February 4, 2020
ஆனால் எதிர்முனையில் இருந்த பேட்ஸ்மேன் பாதிதூரம் வந்துவிட்டு மீண்டும் தன்னுடைய முனைக்கே ஓடினார். இதைப்பார்த்த இந்திய அணி பேட்ஸ்மேன்கள் கூலாக பெயில்ஸை தட்டிவிட்டு ஹாசிமை ரன்-அவுட் செய்தனர். இதனால் 9 ரன்களில் அவர் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இந்த ரன் அவுட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
