தம்பி! 'ஐபிஎல்ல' கலந்துக்காத... 'அட்வைஸ்' சொன்ன முன்னாள் கேப்டன்... 'முடியாது' செம ரிப்ளை கொடுத்த சின்ன பையன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 04, 2020 12:18 AM

ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டாம், என்று கூறிய முன்னாள் வீரர் மைக்கேல் வாகனுக்கு கொல்கத்தா வீரர் டாம் பேண்டன் பதிலளித்து இருக்கிறார்.

IPL 2020: Tom Banton responds to Michael Vaughen\'s suggestion

ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 29-ம் தேதி தொடங்கவிருக்கிறது. ஒவ்வொரு அணியும் புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்து இருப்பதால் இந்த ஐபிஎல் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொடர்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. உலகளவில் ரசிகர்கள் இருப்பதாலும், எக்கச்சக்க புகழ் கிடைப்பதாலும் மற்ற நாடுகளின் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் இங்கிலாந்தின் இளம்வீரர் டாம் பேண்டன் ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் கவுண்டி போட்டிகளில் சோமர்செட் அணிக்காக விளையாட வேண்டும் என்று, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அவருக்கு அட்வைஸ் கூறியிருந்தார். அதற்கு டாம் அளித்த பதிலில், ''நான் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வது 100% உறுதி.

நான் கிரிக்கெட்டராக வளர்ந்து வரும்போது ஐபிஎல் வித்தியாசமாக தெரிந்தது. அதனால் அதில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதேபோல இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும் என்று நினைத்தேன். ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். ஐபிஎல் தொடரில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் , அது உலகக்கோப்பை போட்டிக்கு உதவியாக இருக்கும்,'' என தெரிவித்து இருக்கிறார்.