டெஸ்ட் மற்றும் 'ஒருநாள்' தொடர்களில் இருந்து 'ஓபனிங்' பேட்ஸ்மேன் விலகல்?... அவருக்குப்பதில் விளையாடப்போவது... இந்த 'இளம்வீரர்கள்' தானாம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் காயமடைந்து போட்டியின் பாதியிலேயே விலகிய ஹிட்மேன் ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட மாட்டார் என பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. காயத்தின் அளவு முழுமையாக இன்னும் தெரியவில்லை எனினும் அவர் கண்டிப்பாக அடுத்துவரும் போட்டிகளில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக மயங்க் அகர்வால் விளையாடுவார் என்றும், அதேபோல டெஸ்ட் தொடர்களில் ரோஹித்துக்கு பதிலாக ஷுப்மன் கில் விளையாட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. முன்னதாக மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் காயமடைந்த நிலையில் அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுல் களமிறங்கி விளையாடி வருகிறார்.
தற்போது ஹிட்மேன் என புகழப்படும் ரோஹித் சர்மாவும் காயமடைந்து இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் கவலையடைந்து இருக்கின்றனர். ரோஹித் சர்மா ஆடாமல் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையுமா? இல்லை டி20 தொடரைப்போல டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
