ஒரே நாளில் இத்தனை பேர் 'பலியா?'... 'மிரட்டும் கொரோனா'... அச்சத்தில் 'சீனர்கள்'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Feb 05, 2020 11:16 AM

சீனாவில் ஒரே நாளில் கொரோனா வைரஸால் 65 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

65 people Died in one day by Corona virus in China

சீனாவில் கொரோனாவின் தாக்கம் கட்டக்கடங்காமல் பரவி வருகிறது.  நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர்.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளன. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க சோதனைகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.  வுகான் உள்ளிட்ட பாதிப்பு அதிகம் உள்ள நகரங்கள் முற்றிலும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 490 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 24,324 பேர்  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று காலை நிலவரப்படி, கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 425 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் 65 பேர் பலியான சம்பவம் சீன மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CORONA #CHINA #WUHAN #65 PEOPLE DIED