‘அவரு விளையாடியே ரொம்ப நாளாச்சு’.. ‘இனி டீம்ல எடுக்குறது கஷ்டம்தான்’.. யார சொல்றாரு முன்னாள் கேப்டன்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Feb 04, 2020 08:29 AM

தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

MS Dhoni can\'t comeback from anywhere, Says Kapil Dev

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி, உலகக்கோப்பை தொடருக்கு பின் எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. இதனால் மீண்டும் அவர் அணிக்கு திரும்புவார என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பங் பொறுப்பை ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் போன்ற இளம் வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தோனி மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘தோனி நீண்ட நாட்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. அதனால் மீண்டும் அவர் அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் அவர் நிலைத்து இருக்க பார்ம் ரொம்ப முக்கியமானது. இந்திய அணிக்கு என்ன வேண்டும் என்பதை தேர்வு குழு கட்டாயம் பார்க்க வேண்டும்’ என கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

Tags : #CRICKET #MSDHONI #BCCI #KAPILDEV