எந்த வீரரும் ‘எட்டாத’ மைல்கல்... ‘41 வயதில்’ வரலாற்று சாதனை படைத்து ‘அசத்தல்’...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவாசிம் ஜாபர் ரஞ்சிக் கோப்பையில் புதிய வரலாற்று சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த வாசிம் ஜாபர் ரஞ்சிக் கோப்பையில் விதர்பா அணிக்காக விளையாடி வருகிறார். ஏற்கெனவே ரஞ்சிக் கோப்பையில் 150 போட்டிகளுக்கு மேல் விளையாடி இவர் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் கேரள அணிக்கு எதிரான போட்டியில் விதர்பா அணிக்காக விளையாடிவரும் வாசிம் ஜாபர் 12 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். இதன்மூலம் ரஞ்சிக் கோப்பையில் 12 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை இவர் படைத்துள்ளார்.
41 வயதாகும் வாசிம் ஜாபர் 1996-97ஆம் ஆண்டு ரஞ்சிக் கோப்பையில் அறிமுகமாகி தற்போது வரை விளையாடி வருகிறார். மேலும் இவர் 253 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 19,147 ரன்கள் எடுத்துள்ளார். அத்துடன் இவர் இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வாசிம் ஜாபர் 5 சதங்கள், 11 அரை சதங்களுடன் 1,944 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவர் மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக இரட்டை சதங்கள் அடித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
