'வெளிப்படையாக' பேசிய இளம்வீரரை... 'கழட்டி' விட்ட இந்திய அணி... ஏன் இப்டி? 'ஷாக்கான' ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 05, 2020 12:23 AM

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கும் இந்திய வீரர்கள் குறித்த அறிவிப்பை இன்று காலை பிசிசிஐ வெளியிட்டது. இதில் பல்வேறு இளம்வீரர்கள் இடம்பெற்று இருந்தாலும் இந்திய அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமான கே.எல்.ராகுல் இடம்பெறவில்லை.

Why KL Rahul not in the test Squad?, Twitter reacts

இதனால் கொதிப்படைந்த ரசிகர்கள் அவரை ஏன் திடீரென கழட்டி விட்டீர்கள்? என காலையில் இருந்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் உங்களுக்கு வேண்டும் என்றால் அவரை எடுத்துக் கொள்வீர்கள், தேவையில்லை என்றால் கழட்டி விட்டு விடுவீர்களா? என்றும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடைசி டி20  போட்டிக்குப்பின் பேசிய கே.எல்.ராகுல் ஒவ்வொரு மாதமும் ஏராளமான போட்டிகள் விளையாடுவது உடலளவில் கடினமாக இருப்பதாக தெரிவித்தார். இதனால் ஒருவேளை அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்திய அணிக்கான டெஸ்ட் அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, சுப்மான் கில், புஜாரா, ரகானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, விர்திமான் சகா (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, உமேஷ் யாதவ், முகம்மது ஷமி, நவ்தீப் சைனி, இஷாந்த் சர்மா ( உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும்).