இந்த தடவையும் 'வேர்ல்டு' கப்பு நமக்குத்தான்... பாகிஸ்தானை வெரட்டி 'வெளுத்த' இந்திய அணி... 10 விக்கெட் வித்தியாசத்தில் 'சூப்பர்' வெற்றி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 04, 2020 11:12 PM

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை தொடர் தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 43.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

U19 World Cup 2020: India Beats Pakistan by 10 Wickets

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 35.2 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்து இமாலய வெற்றி பெற்றது. இதையடுத்து இந்திய அணி 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. அதிகபட்சமாக இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 105 ரன்களும், சக்சேனா 59 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.