‘தமிழுக்குதான் முதன்மையான இடம்!’.. ‘தமிழ்நாட்டு கடை, வணிக நிறுவனங்களுக்கு’.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 12, 2020 08:47 AM

பெயர் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையானவையாக இருக்க வேண்டும் என்று சென்னை வணிக நிறுவனங்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Name board in TN shops should give preference for tamil

சென்னை வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் வைப்பது குறித்த சட்ட விதிகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதன்படி, பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையானவையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மற்ற மொழிகளில் பெயர்ப் பலகைகள் உபயோகிக்கப்படும் பட்சத்தில் ஆங்கிலத்துக்கு 2வது இடமும், பிற மொழிகளுக்கு 3வது இடமும் ஒதுக்கப்பட வேண்டும் என்றும்,  மொத்தத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் தமிழ் மட்டுமே முதன்மையான மொழியாக இருக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #TAMIL #NAMEBOARD