'மருத்துவமனையில்' இறந்துபோன '4 வயது மகள்'.. 'பிரேதத்தை'.. பெற்றுக்கொள்ளாமல் தப்பியோடிய பெற்றோர்.. பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 23, 2019 06:28 PM

வடமாநிலத்தில் தார்வார் மாவட்டம் அருகே உள்ளது உப்பள்ளி. இங்குள்ள கோகுலா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தாதாபீர் சேக் மற்றும் பூஜா தாகூர் என்கிற தம்பதியர்.

Parents escaped after their 4 yrs old child dead in hospital

இவர்கள் தங்களது 4 வயது சிறுமியை அங்குள்ள கிம்ஸ் அரசு மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லை என கூறி சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி சிறுமி உயிரிழந்ததை அடுத்து குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்த பின், வாங்கிக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால், பெற்றோர்கள் இருவரும் குழந்தையின் உடலைப் பெற்றுக்கொள்ளாமல் தப்பியோடிவிட்டதாகத் தெரியவந்ததை அடுத்து, மருத்துவர்கள் போலீஸாரிடம் தகவல் அளித்தனர். அதன் பின்னர் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில், அந்த தம்பதியர், தங்கள் ஊரையும் காலி செய்துவிட்டு வெளியூருக்கு சென்றுவிட்டது தெரியவந்தது.

அதன் பின்னர்தான், குழந்தையின் தந்தை எனச் சொல்லப்பட்ட தாதாபீரின் மீது அதிக வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அவரின் பெயரின் போலீஸாரின் ரவுடி பட்டியலில் இருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, உண்மையில் அந்த குழந்தை இவர்களுடையதா அல்லது கடத்திவரப்பட்ட சிறுமியா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணையை துவங்கியுள்ளனர்.

Tags : #BIZARRE #MINOR GIRL #HOSPITAL