‘பல்கலைக்கழக வளாகத்திலேயே’... ‘மாணவி மீது ஆசிட் வீசிய’... ‘சக மாணவர் செய்த அதிர்ச்சி காரியம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 09, 2019 11:07 PM

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவி மீது, சக மாணவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

acid attack on college student in chidambaram university

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவர் முத்தமிழன். இவர் அதே வகுப்பில் படித்துவரும் ஒரு மாணவியை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி எவ்வித காரணத்தினாலோ, முத்தமிழனோடு பழகுவதை நிறுத்தியுள்ளார். பல்கலைக் கழக விருந்தினர் மாளிகை அருகே நடந்துவந்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதற்கு மாணவி செருப்பைக் காட்டி, மாணவனை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முத்தமிழன், மாணவி  மீது ஆசிட் வீசியுள்ளார். இதைப் பார்த்த பல்கலைக்கழக மாணவர்கள், முத்தமிழனை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினர். இதில் படுகாயமடைந்த மாணவர் முத்தமிழன் மற்றும் ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த மாணவி இருவரும், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆசிட் வீச்சு சம்பவத்தால் சிதம்பரம் பல்கலைக் கழகத்தில் பரபரப்பு நிலவியது.

Tags : #CHIDAMBARAM #UNIVERSITY #ACID