'என்னையே கிளம்ப சொல்றியா'...'சென்னை'யில் காவலருக்கு நேர்ந்த கொடுமை'...அதிரவைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jun 21, 2019 02:45 PM

இரவில் ரோந்து சென்ற காவலரை நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Four men attacked a police constable in chennai video goes viral

கடந்த 14ம் தேதி,பாண்டி பஜார் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக பணி புரியும், கார்த்திகேயன் மற்றும் குழந்தை வேலு என்ற இரு காவலர்களும் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். அப்போது கோடம்பாக்கம் பகுதியில் ரோந்து சென்ற போது, சில இளைஞர்கள் அந்த பகுதியில் தங்களது வாகனத்தை நிறுத்தி கொண்டு, பேசி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ரோந்து காவலர் கார்த்திகேயன் 'நேரமாச்சு, இங்கு நிற்க வேண்டாம் கிளம்புங்கள்' என்று கூறியுள்ளார்.

இதனால் அங்கிருந்தவர்களுக்கும் காவலர்களும் வாய் தகராறு ஏற்பட 'நான் வக்கீல் என்னையே கிளம்ப சொல்லுறியா' என முகமது ரிஸ்வான் என்பர், காவலர் கார்த்திகேயனின் சட்டையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரின் நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து,காவலரை சரமாரியாக லத்தியில் தாக்கி மார்பகத்தில் குத்தியுள்ளனர். வாக்கி டாக்கியை கீழே தள்ளி காலால் மிதித்துள்ளனர். இதனை வீடியோ எடுத்து கொண்டிருந்த காவலர் குழந்தை வேலுவின் செல் போனையும் பறிக்க முயற்சித்துள்ளனர்.

இதையடுத்து காவலர் குழந்தைவேலு காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்த ஆயிரம் விளக்கு குற்ற பிரிவு ஆய்வாளர் ஜெயலட்சுமி சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அப்போது காவலரை தாக்கிய நான்கு பேரும் தப்பியோட முயற்சித்துள்ளனர். இதையடுத்து அவர்களை மடக்கி பிடித்த காவலர்கள், நான்கு போரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார்கள்.

இதையடுத்து அவர்களிடம் நடந்த பட்ட விசாரணையில் அவர்கள் வழக்கறிஞர்கள் இல்லை என தெரிய வந்தது. இதனிடையே காவலர் தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதனிடையே நடந்த சம்பவம் குறித்து திநகர் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேசியபோது ''இந்த சம்பவம் வாய் தகராறு காரணமாக நடைபெற்றது என்றும் தாக்கப்பட்ட காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும் காவலரை தாக்கிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாகவும் அவர் உறுதி செய்தார்.

Tags : #POLICE #ATTACKED #CHENNAI CITY POLICE #CONSTABLE