'அதிரடி' நடவடிக்கைகளால்... '50 நாட்களுக்கு' பின் 'பூஜ்ஜியம்' ஆன எண்ணிக்கை... 'நிம்மதி' அடைந்துள்ள 'நாடு'...
முகப்பு > செய்திகள் > உலகம்நியூஸிலாந்தில் நேற்று புதிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பூஜ்ஜியமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்தில் இதுவரை 1,137 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அங்கு எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததையடுத்து நியூஸிலாந்து அரசு சில நாட்களுக்கு முன் ஊரடங்கை தளர்த்தியது. இதைத்தொடர்ந்து மார்ச் 16ஆம் தேதிக்கு பிறகு நேற்று முதல்முதலாக அங்கு யாருக்கும் புதிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள நியூஸிலாந்து சுகாதாரத் துறை இயக்குநர் ஜெனரல் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட், "மக்கள் அனைவரும் அதிக பொறுப்புடன் நடந்துகொண்டதாலேயே கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாதது ஆறுதல் தரும் செய்தி. இருப்பினும் மக்கள் தொடர்ந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா இனி பரவாது என அலட்சியமாக இருக்கக் கூடாது. வைரஸ் அறிகுறி வெளிப்பட சில நாட்கள் என்பதால் மக்கள் அதிக கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.