கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதா?.. சீன ஆய்வக விஞ்ஞானி சொல்லிய பதற வைக்கும் தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Dec 06, 2022 10:38 AM

கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து வெளியானது என ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்திருப்பது உலக அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

Covid19 was man made virus says scientist who worked in Wuhan

Also Read | "இதுதான் தொழில் பக்தி போல?.. கோவிலில் திருட போறதுக்கு முன்னாடி.. நபர் செஞ்ச காரியம்!!.. வைரல் சம்பவம்!!

கொரோனா 2020 ஆம் ஆண்டு உலகையே ஸ்தம்பிக்க செய்தது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவியதாக சொல்லப்படும் இந்த வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலியாகினர். இருப்பினும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வந்த பின்னர், உயிரிழப்புகள் கணிசமான அளவில் குறைந்திருக்கின்றன. அதேவேளையில் உலகளவில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் கொஞ்ச நஞ்சமல்ல. குறிப்பாக வேலை இழப்புகள், போக்குவரத்துக்கு தடை என உலகின் பல நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வந்தன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் மாகாணத்தில் உள்ள ஆய்வகத்தில் இருந்து பரவியதாக அங்கு பணிபுரிந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்திருப்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரூ ஹப். இவர் வூஹானில் உள்ள வைரலாஜி ஆய்வு மையத்தில் பணியாற்றி வந்தார். இவர் தற்போது, வூஹானை பற்றிய உண்மைகள் (Truth about Wuhan) எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், ஆண்ட்ரூ கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் இருந்து வெளியேறியதாக குறிப்பிட்டிருப்பதாக தெரிகிறது. மேலும், பல ஆண்டுகளாக வௌவால்களை வைத்து அங்கே ஆராய்ச்சி நடைபெற்று வந்ததாகவும் ஆண்ட்ரூ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக நியூயார்க் போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

Covid19 was man made virus says scientist who worked in Wuhan

மேலும், வெளிநாட்டு ஆய்வகங்களில் பாதுகாப்பு மேலாண்மை உள்ளிட்ட உயர்தர கட்டுப்பாட்டு அமைப்புகள் இல்லை எனவும் அதன் காரணமாகவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வூஹான் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிவு ஏற்பட்டதாகவும் ஆண்ட்ரூ தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டும் அல்லாமல் அமெரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் (என்ஐஎச்) அமைப்பின் உதவியுடன் வூஹானில் இந்த ஆராய்ச்சி நடைபெற்று வருவதாகவும் ஆண்ட்ரூ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து வெளியானது என அங்கு பணிபுரிந்த ஆராய்ச்சியாளர் கூறியிருப்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | குனிந்து பாதம் தொட்டு சாமி கும்பிட்ட பக்தர்.. சாயிபாபா காலடியிலேயே பிரிந்த உயிர்..!

Tags : #VIRUS #SCIENTIST #WORK #WUHAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Covid19 was man made virus says scientist who worked in Wuhan | World News.