ஒரே ஒரு கொசுவால்.. கோமாவுக்கு போன இளைஞர்.. "கூடவே 30 ஆபரேஷனும்".. மனதை ரணமாக்கும் பயங்கரம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Dec 01, 2022 02:14 PM

கொசு கடித்ததால் வாலிபர் ஒருவருக்கு ஏற்பட்ட சம்பவம் தொடர்பான செய்தி, தற்போது பலரையும் பீதியில் உறைய வைத்துள்ளது.

man slips into coma by mosquito undergoes 30 surgeries reportedly

Also Read | மெடிக்கல் போயிட்டு வர்றேன்னு போன கணவர்.. Wait பண்ண மனைவிக்கு 1 1/2 வருஷம் கழிச்சு காத்திருந்த ஷாக்!!

நம்மைச் சுற்றித் திரியும் கொசுக்கள் நம்மை கடிக்கும் போது ஒருவித எரிச்சல் ஆரம்பத்தில் உருவாகும். அதுவே அதிகம் ஆகும் பட்சத்தில் டெங்கு போன்ற நோய்கள் ஏற்பட்டு நிலைமையை இன்னும் மோசமாகவும் மாற்றும்.

அப்படி ஒரு சூழலில், ஒரே ஒரு கொசு கடித்ததன் காரணமாக கோமா வரை தள்ளப்பட்டுள்ள வாலிபர் குறித்த பின்னணி, அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

ஜெர்மனி நாட்டின் Roedermark என்னும் பகுதியில் வசித்து வருபவர் செபாஸ்டின் ரோட்ஷ்கே (Sebastian Rotschke). 27 வயதாகும் இவரை கடந்த ஆண்டு, ஆசிய புலி கொசு (Asian tiger mosquito) ஒன்று கடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆரம்பத்தில் வெறும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் செபாஸ்டினுக்கு உருவானதாகவும் கூறப்படுகிறது. இது ஆரம்பமாக இருந்த நிலையில், இதன் பின்னர் ஏராளமா பிரச்சனைகள் செபாஸ்டினுக்கும் உருவாகி உள்ளது.

அவரது இரண்டு கால் விரல்களும் சிறிதளவு துண்டிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், முப்பது அறுவை சிகிச்சைகளை அவர் மேற்கொண்டதாவும் சொல்லப்படுகிறது. நான்கு வாரங்கள் கோமாவில் இருந்த செபாஸ்டினுக்கு ரத்தத்தில் விஷம் கலந்ததால், சிறுநீரகம், நுரையீரல் செயலிழப்பும் சில சந்தர்ப்பங்களில் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதே போல, அவரது தொடை பகுதியில் உருவான சீழை அகற்றுவதற்காகவும் தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்துள்ளது. மேலும் உயிர் பிழைப்பதற்கு கூட வாய்ப்பே இல்லை என்றும் செபாஸ்டின் கருதி உள்ளார். தனது மோசமான அனுபவம் குறித்து பேசும் செபாஸ்டின், கொசு கடித்ததால் படுத்த படுக்கையாகி விட்டேன் என்றும் கழிவறைக்கு கூட செல்ல முடியாமல், சாப்பிடவும் முடியாமல் அவதிப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆசிய புலி கொசுடு கடித்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதை குறிப்பிடும் செபாஸ்டின், தற்போது நலமாக இருப்பதாகவும் கொசுக் கடியில் இருந்து மற்றவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். ஆசிய புலி கொசுக்கள் மேற்கு நைல் வைரஸ், ஜிகா வைரஸ் உள்ளிட்ட நோய்களை பரப்பக் கூடிய பகல் நேர பூச்சிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | "International கிரிக்கெட்டுக்கே Tough குடுப்பாங்க போலயே".. அஸ்வின் பகிர்ந்த வீடியோ.. "Replay ஓடுற இடம் தான் அட்டகாசம்"

Tags : #MAN #COMA #MOSQUITO #SURGERIES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man slips into coma by mosquito undergoes 30 surgeries reportedly | World News.