பல நாள் கழிச்சு உரிமையாளரை பார்த்த செல்ல நாய்.. வீடே அதகளம் ஆகிடுச்சு.. ஹார்ட்டின்களை அள்ளிக்குவித்த வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபல நாட்கள் கழித்து தனது உரிமையாளரை சந்தித்த நாய் ஒன்று ஆனந்தமாக விளையாடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதா?.. சீன ஆய்வக விஞ்ஞானி சொல்லிய பதற வைக்கும் தகவல்..!
இணையத்தின் வளர்ச்சியால் சமூக வலை தளங்களின் வீச்சு தற்போது அதிகரித்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். எளிதில் கவனத்தை ஈர்க்கும் விஷயங்கள் சமூக வலை தளங்களில் கண்ணிமைக்கும் நேரத்தில் வைரலாகி விடுவது உண்டு. குறிப்பாக மக்களின் மனதை கவரும் சம்பவங்கள் இணையத்தில் மிகப்பெரும் வரவேற்பை பெற தவறுவதில்லை. அப்படியான வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக மனிதர்களுக்கு செல்லப் பிராணிகள் மீது எப்போதுமே ஒரு காதல் உண்டு. இப்போது என்று இல்லை. மனிதர்கள் நாடோடிகளாக இருந்த காலத்திலேயே விலங்குகளை பழக்கப்படுத்தி வளர்த்து வந்திருக்கின்றனர் நம் முன்னோர்கள். விவசாயத்திற்கு மாடு வளர்ப்பில் துவங்கி நாய், பூனைகள் ஆகியவற்றை மனிதர்கள் வளர்த்து வந்ததற்கான ஏராளமான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. நவீன காலத்திலும் வளர்ப்பு பிராணிகள் மீது மக்களுக்கு இருக்கும் காதல் குறையவில்லை. அந்த வகையில், கோல்டன் பாய் லியோ எனும் பெயரில் உள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது.
அதில், "லியோ 3 தினங்களுக்கு பிறகு அம்மாவை சந்திக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டின் பால்கனியில் நிற்கும் செல்ல நாய், கீழே காரில் இருந்து இறங்கும் தனது உரிமையாளரை பார்க்கிறது. அதன் பிறகு வாலை ஆட்டிக்கொண்டே கதவின் அருகே சென்று ஆர்வத்துடன் நிற்கிறது.
அந்தப் பெண்மணி உள்ளே வந்த உடன் அவருடன் செல்லமாக விளையாடும் நாய், ஆனந்தத்தில் வீட்டையே சுற்றி வருகிறது. மேலும், அங்கிருந்த சோபா மீது துள்ளிக்குதித்து விளையாடுகிறது. இந்த வீடியோ நாய் பிரியர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
லியோ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த நாயின் செயல்பாடுகளை அதன் உரிமையாளர் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன.

மற்ற செய்திகள்
