"தெய்வமே.. வேலை கிடைச்சிடுச்சா".. கூகுளில் செலெக்ட் ஆன மகன்.. சந்தோஷத்தில் அம்மா கொடுத்த ரியாக்ஷன்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇளைஞர் ஒருவருக்கு கூகுளில் வேலை கிடைத்ததை அறிந்து அவரது தாய் சந்தோஷமடையும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read | சூர்யா சிவாவை சஸ்பெண்ட் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.. வெளியான பரபரப்பு அறிக்கை..!
பெற்றோர்கள் எப்போதும் தங்களது வெற்றிகளை விட, தங்களது பிள்ளைகளின் வெற்றியை கொண்டாடுவதிலேயே பெரிதும் ஆர்வம்கொண்டிருக்கிறார்கள். வாழ்நாள் முழுவதும், தங்களது பிள்ளைகளின் ஒவ்வொரு அடியையும் கவனத்தோடு கண்காணிக்கும் பெற்றோர்கள் நல்ல நிலைமைக்கு அவர்களை கொண்டுசேர்க்க வேண்டும் என்பதையே லட்சியமாகவும் வைத்திருக்கிறார்கள். நீண்ட நாள் காத்திருப்புக்கு பின்னர் கூகுளில் வேலைக்கு தேர்வான மகனை பார்த்ததும் மகிழ்ச்சியில் திகைத்துப்போய் நிற்கும் இந்த அம்மாவும் அப்படியானவர்களில் ஒருவர் தான்.
அட்வின் ராய் என்னும் இன்ஸ்டாகிராம் பயனர் தனது பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், வீட்டுக்குள் வரும் அவரை அவரது அம்மா பார்க்கிறார். "ஏன் சிரிக்கிறாய்?" என அவர் கேட்க, அம்மாவுக்கே அது புரிந்துவிடுகிறது. "வேலை கிடைச்சிடுச்சா?" என ஆர்வத்தோடு அவர் கேட்க, அங்கே வரும் இன்னொரு பெண் "கூகுளில் வேலை கிடைத்துவிட்டதா?" என வினவுகிறார். இதற்கு அந்நபர் ஆம் எனச் சொல்ல, "தெய்வமே", என சொல்லியபடி ஆனந்தம் கொள்கிறார் அவருடைய அம்மா.
இந்த வீடியோவை பகிர்ந்த அவர் அப்பக்கத்தில் தன்னுடைய அனுபவம் குறித்தும் பகிர்ந்திருக்கிறார். அதில்,"நாம் பொதுவாக சமூக ஊடகங்களில் எந்த ஒரு கதையின் நல்ல பக்கத்தையும் பார்க்கிறோம். அதன் பின்னால் நடந்த முயற்சியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நான் 2013 முதல் google க்கு விண்ணப்பித்து வருகிறேன். நான் ஒவ்வொரு வருடமும் தவறாமல் விண்ணப்பித்தேன் (எனது விண்ணப்பங்களுக்கான ஆதாரம் என்னிடம் உள்ளது 😀). எனக்கு பதில்கள் வராமல் போகும்போது அதற்கான காரணங்களை கண்டுபிடிக்க முயற்சித்தேன். ஒருவேளை நான் நல்ல கல்லூரியில் படிக்காமல் இருந்திருக்கலாம் என நினைத்திருக்கிறேன். ஆனால், அதனை இனி என்னால் மாற்றமுடியாது. ஆனால், என்னுடைய ரெஸ்யூம் மற்றும் போர்ட்ஃபோலியோவில் மாற்றங்களைச் செய்து மீண்டும் மீண்டும் முயற்சித்தேன். இறுதியாக நான் இந்த இடத்திற்கு வந்துவிட்டேன்" என உருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், வேலை கிடைத்த விதம் மற்றும் பிறருக்கான அனுபவங்களையும் அவர் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானதை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read | "உலகத்துலயே பெரிய உருட்டு இது தான்".. இறைச்சி குறித்து ரசிகரின் கருத்திற்கு விராட் கோலி போட்ட கமெண்ட்!!

மற்ற செய்திகள்
