'பிரபல நிதி நிறுவனத்தில் 813 சவரன் நகை, பணம் கொள்ளையடித்தவர்கள் வேற யாரும் அல்ல’.. அதிரும் திருப்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 30, 2019 02:08 PM

கோவையில் முத்தூட் மினி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் நாடகமாடிய பெண் ஊழியர் ரேணுகாதேவி, காதலன் சுரேஷ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

female staff and her lover arrested in muthoot mini robbery case

கோவை ராமநாதபுரம் முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தில் அண்மையில் 813 சவரன் தங்க நகைகளும் ரொக்கப்பணமும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடைக்குள் புகுந்து அங்கிருந்த 2 பெண் ஊழியர்களைத் தாக்கியுள்ளாகவும் அதன் பின்னர் அந்த பெண்கள் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. அதன் பின்னர், அந்த முகமூடிக் கொள்ளைக் காரர் சாவி கொண்டு லாக்கரைத் திறந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளை அடித்துள்ளார்.

இதனையடுத்து  4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சிசிடிவி காட்சிகளைம் கொண்டு போலீஸார் துப்பு துலக்கியபோது, முத்தூட் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ரேணுகாதேவி மற்றும் ரேணுகா தேவியின் காதலன் சுரேஷ் இருவரையும் போலீஸார் சந்தேகத்தின் பேரில் தேடியுள்ளனர்.

பின்னர் இருவரையும் பாலக்காட்டில் வைத்து விசாரணை செய்த போலீஸார், இந்த கொள்ளையைச் செய்துவிட்டு, தங்களுக்குத் தெரியாதது போல் நடித்த பெண் ஊழியர் ரேணுகாதேவியும், அவரது காதலன் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்ததோடு முத்தூட் மினி நிறுவனத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 803 சவரன் தங்கநகைகள், ரூ.1.30 லட்சம் பணம் முதலானவற்றை இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

Tags : #CCTV #MUTHOOT #THEFT #COIMBATORE