இன்னாள் மாணவருக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்! நெகிழும் ஓட்டப்பந்தய வீரர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | Apr 30, 2019 06:18 PM

தேசிய அளவிலான தடகளப் போட்டிக்கு தயாராகி வரும் ஏழை மாணவருக்கு அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் உதவியுள்ளனர்.

old students helped the boy to get participate in the competetion

கோவை ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் அரவிந்தராஜ். இவர் 1500 மீட்டர், 3000 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் மாவட்ட மற்றும் மாநில அளவில் பல பதக்கங்களை வாங்கி குவித்துள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான ஊரக விளையாட்டு போட்டியில் 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதலிடம் பிடித்தார். இதன் தொடர்ச்சியாக வரும் மே மாதம் 3, 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் டேராடூனில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

இந்நிலையில், ஏழ்மை மற்றும் குடும்பச் சூழல் காரணமாக அரவிந்தராஜ் பங்கேற்க முடியாத சூழலை அறிந்த ஒத்தக்கால் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள்  அரவிந்தராஜ்க்கு தேவையான விளையாட்டு சீருடைகள், ஷூ, பயிற்சியாளர் மற்றும் சத்தான உணவுகளை வாங்கி கொடுக்க முன்வந்துள்ளனர்.

மேலும், ஒத்தக்கால் அரசுப் பள்ளி சார்பில் அவர் டேராடூன் சென்று வர போக்குவரத்துக்கு தேவையான அனைத்து செலவையும் பள்ளி நிர்வாகம் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக முன்னாள் மாணவர்கள் இதேபோல் ஒவ்வொருவரும் தாங்கள் பயின்ற பள்ளியில் பயிலும் திறமையான மாணவர்களை அடையாளம் கண்டு தங்களால் இயன்ற உதவியை வழங்க முன்னாள் மாணவர்கள் முன்வந்தால் பலரும் பயன்பெறுவார்கள் என்று கூறியுள்ளனர்.

Tags : #COIMBATORE #NATIONAL LEVEL COMPETETION #OLDSTUDENTS