'தமிழகத்திலும் தடை பண்ணுங்க'... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 'சீமான்' கோரிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்திலும் அதைப்போன்று செயல்படுத்தக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சீமான், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கேலாட் அவர்கள், ராஜஸ்தானில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்துள்ளதையும், முறையான சான்றிதழ் இல்லாது இயங்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதையும் முழுமையாக வரவேற்கிறேன்.
காற்று மாசுபாடு, கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளானவர்களைப் பெரிதும் பாதிப்பது மட்டுமின்றி, நோயாளிகளின் விகிதத்தையும் அதிகரிக்கச்செய்யும் என்பதை மனதிற்கொண்டு எடுக்கப்பட்ட இந்நடவடிக்கை பாராட்டுதற்குரியதாகும். இதேபோன்று, சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களுக்குத் தகுந்த இழப்பீட்டை உறுதி செய்து, பட்டாசுத்தொழிலைச் சார்ந்து இருக்கும் ஆயிரக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்களுக்கு நிரந்தர மாற்று வாழ்வாதாரத்தை ஏற்பாடு செய்ய முன்வர வேண்டுமெனவும் தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன், எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இராஜஸ்தான் மாநில முதல்வர் @ashokgehlot51 அவர்கள், ராஜஸ்தானில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்துள்ளதையும், முறையான சான்றிதழ் இல்லாது இயங்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதையும் முழுமையாக வரவேற்கிறேன்.
— சீமான் (@SeemanOfficial) November 3, 2020
(1/3) pic.twitter.com/1d1CajbQHl

மற்ற செய்திகள்
