‘நடிகை அமலா பால் தாக்கல் செய்த கோரிக்கை மனு விவகாரம்!’.. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ‘அதிரடி’ உத்தரவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 03, 2020 06:14 PM

தமிழ் சினிமாவில் முன்னமே நடித்திருந்தாலும் மைனா படத்தின் மூலம் முத்திரை பதித்து, 'ஆடை' படத்தில் உடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி கவன ஈர்ப்பு செய்த நடிகை அமலா பால்.

Amala Paul can file defamation suit Over Ex friend, Says Chennai HC

இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து பெற்ற இவருடன், மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங் எடுத்த புகைப்படம் சோஷியல் மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  அமலா பாலுடன் சேர்ந்து  தான் எடுத்த புகைப்படங்களை முதலில்  இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பவ்னிந்தர் சிங் சிறிது நேரத்தில் அவற்றை நீக்கினார்.

இந்த நிலையில் நடிகை அமலாபால்  தனது முன்னாள் நணபர் பவ்னிந்தர் சிங் தன்னுடன் எடுத்த புகைப்படங்களையும் தனக்கும் அவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக குறிப்பிட்டு வெளியிட்டதாகவும், அந்த புகைப்படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

Amala Paul can file defamation suit Over Ex friend, Says Chennai HC

மேலும் அந்த நண்பர் மீது அவதூறு வழக்கு தொடரவும் அனுமதி கோரினார். இந்த மனுவை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் விசாரித்த பிறகு, பவ்னிந்தர் சிங்க்கு எதிராக, நடிகை அமலா பால் சிவில் அவதூறு வழக்கு தொடருவதற்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Amala Paul can file defamation suit Over Ex friend, Says Chennai HC | Tamil Nadu News.