'இல்லாதத ஒண்ணும் அவரு பேசலையே...' 'திருமாவே விட்டாலும், நாங்க இத விடமாட்டோம்...' - மனுஸ்மிருதி விவகாரம் குறித்து சீமான் அதிரடி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் ஏதும் இல்லாததை சொல்லவில்லை என மனுஸ்மிரிதி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் குறிப்பிடுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி அவர்கள் பெண்களை குறித்து இழிவாக பேசியதாக பாரத ஜனதா கட்சியின் சில உறுப்பினர்கள் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
ஆனால் அதன் உண்மையை பார்க்கையில் திருமாவளவன் அவர்கள் மனுஸ்மிரிதியில் பெண்களை இழிவுப்படுத்தி கூறியுள்ளதாக வெளியிட்ட வீடியோவை வைத்து திருமாவளவன் தன் சொந்த கருத்தை கூறியுள்ளதாக சிலர் அவதூறு பரப்பி வந்தனர். மேலும் பாஜக கட்சியினர் திருமாவளவன் அவர்களை எதிர்த்தும் போராட்டம் நடத்தி வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தொல். திருமாவளவன் அவர்களுக்கு துணை நின்று தன் கருத்தை தெரிவித்துள்ளார். அதில், 'திருமாவளவன் மனுஸ்மிருதி பெண்களை இழிவா பேசியிருக்குனு சொல்றார். இல்லாததை அவர் பேசவில்லை. உண்மையில் திருமா பெண்கள் மீதான அக்கறையில் பேசினார், சில குறிப்பிட்டவர்கள் எதிர்க்கிறார்கள், திருமா தன் கருத்தில் இருந்து பின் வாங்கப் போவதில்லை. திருமாவே விட்டாலும் நாங்கள் இனி விடப்போவதில்லை' என மனுஸ்மிரிதி விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார் சீமான்.
மேலும் தற்சார்பு விவசாயத்தை கேலி செய்தவர்கள் இப்போது அண்ணாமலையை வைத்து அதையே செய்கிறார்கள் என பாஜகவை விமர்சித்து பதிலளித்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்.

மற்ற செய்திகள்
