கிரிக்கெட்டில் இருந்து ‘ஓய்வு’ பெறும் கடைசி போட்டி.. ‘இப்டி மறக்க முடியாத சம்பவம் பண்ணிடீங்களே பாஸ்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jan 28, 2020 02:35 PM

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லரை தகாத வார்த்தையால் திட்டிய தென் ஆப்பிரிக்க வீரர் பிலாண்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Philander fined for abusive send off to Jos Buttler

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி தி வண்டெரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 400 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 191 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை அவுட் செய்ததும், அவரை தகாத வார்த்தைகளால் தென் ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர் திட்டினார். இதனால் அவருக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் இது அவருக்கு கடைசி டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஓய்வு பெறும்போது அபராதத்துடன் பிலாண்டர் வெளியேறுகிறார். முன்னதாக இந்த தொடரில் பிலாண்டரை, ஜோஸ் பட்லர் திட்டியிருந்தார். அதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #CRICKET #PHILANDER #BUTTLER #ENGVSA