'தாராளமா' எடுத்துக்கங்க.. பிரபல வீரர்களை திடீரென 'கழட்டி' விட்ட அணிகள்.. பரபரக்கும் ஐபிஎல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Nov 13, 2019 09:31 PM
ஐபிஎல் ஏலம் வருகின்ற டிசம்பர் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் வீரர்களை அணி மாற்றம் செய்வது, பயிற்சியாளர்களை மாற்றுவது என படு பிஸியாக உள்ளன. இந்த நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேபிடல்ஸ் இரு அணிகளும் தங்களது முக்கிய வீரர்களை கழட்டிவிட்டு உள்ளன. ஏனெனில் வீரர்களை அணிமாற்றம் செய்வதற்கு நாளை தான் (நவம்பர் 14) கடைசி நாள்.

பஞ்சாப் அணி அஸ்வினை தொடர்ந்து தங்களது அணியின் முக்கிய பந்து வீச்சாளரான அங்கித் ராஜ்புத்தை ராஜஸ்தான் அணிக்கு விற்பனை செய்துள்ளது. அதேபோல டெல்லி அணி தங்களது அணியின் வேகப்பந்து வீச்சாளரான ட்ரெண்ட் போல்ட்டை மும்பை அணிக்கு விற்பனை செய்துள்ளது. இதனால் இந்தமுறை ஐபிஎல் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
