‘விலகி இருங்க, வீட்லயே இருங்க’!.. ‘பீலா ராஜேஷ்’ போல் உடையணிந்து.. பேசி அசத்திய சிறுமி.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 11, 2020 12:06 PM

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் போல் உடைந்த அணிந்து பேசிய சிறுமியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Salem girl dressed like Beela Rajesh video goes viral on social media

கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தினந்தோறும் மருத்துவர்களுக்கு பல்வேறு அறிவுறிகளை வழங்கி சுகாதாரத்துறையை சுறுசுறுப்புடன் இயங்க வைத்து வருகிறார். கொரோனா பாதிப்புகள் தொடர்பான தகவல்களை தினமும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து வருகிறார். அவரது செயல்பாடுகள் அனைவராலும் பாரட்ட பெற்று வருகிறது.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் வாலப்படியை சேர்ந்த சிறுமி லோகநந்த ஸ்ரீ சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் போல் உடையணிந்து, கொரோனா குறித்த தகவல்களை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிப்பது போல சிறுமி பேசி அசத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.