81 பேருடன் 'சென்னை முதலிடம்'... மாவட்ட வாரியாக வெளியான 'கொரோனா' பட்டியல்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Apr 03, 2020 10:41 PM

இன்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சுகாதாரத்துறை வெளியிட்டு இருக்கிறது.

Coronavirus affects 81 People in Chennai, Details Listed!

இதில் 81 பேருடன் சென்னை முதல் இடத்திலும், 43 பேருடன் திண்டுக்கல் மாவட்டம் 2-வது இடத்திலும் 36 பேருடன் நெல்லை மாவட்டம் 3-வது இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்த நிலையில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர்.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:-

திண்டுக்கல் 43, நெல்லை 36, ஈரோடு 32, கோவை 29, தேனி 21 , நாமக்கல் 21, கரூர் 20, செங்கல்பட்டு 18, மதுரை 15, விழுப்புரம் 13, திருவாரூரில் 12 பேர், விருதுநகர் 11, திருப்பத்தூர் 10 தூத்துக்குடி 9, சேலத்தில் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, சிவகங்கை, நாகையில் தலா 5 பேரும், காஞ்சிபுரத்தில் 4 பேரும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை, ராமநாதபுரத்தில் தலா 2 பேரும், திருவள்ளூர், வேலூர், தஞ்சை, திருப்பூரில் தலா ஒருவருக்கும்  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.