'தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ்'... 'பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 25, 2020 03:21 PM

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 23  ஆக உயர்ந்துள்ளது.

5 new COVID-19 Cases in Salem Tamil Nadu: Coronavirus Update

இந்தோனேஷியாவில் இருந்து சுற்றுலா வந்த 4 பேர் மற்றும் அவர்களது சுற்றுலா வழிகாட்டியான சென்னையை சேர்ந்த நபர் உள்பட மொத்தம் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா அறிகுறி இருந்ததால்  கடந்த 22 ஆம் தேதியிலிருந்து 5 பேரையும் தனிமைப்படுத்தி, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.  இந்த 5 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

Tags : #SALEM #HOSPITAL #COVID-19 #WUHAN #VIJAYABASKAR #HUBEI