தமிழகத்தில் 'இன்று' மட்டும் புதிதாக '96 பேருக்கு' கொரோனா... சுகாதாரத்துறை செயலாளர் 'தகவல்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Apr 09, 2020 06:44 PM

தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tamilnadu 96 New Positive Cases Of Coronavirus Total Count 834

தமிழகத்தில் இன்று புதிதாக 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த எண்ணிக்கை 738லிருந்து 834 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 96 பேரில் 84 பேர் டெல்லி மாநாடு சென்று திரும்பியவர்கள் என அவர் கூறியுள்ளார்.

மேலும் வீட்டுக் கண்காணிப்பில் 59,918 பேர் உள்ளதாகவும், இதுவரை  27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.