கொரோனாவால் 'வேப்பிலைக்கு' ஏற்பட்ட திடீர் கிராக்கி... ஒரு 'கட்டு' எவ்ளோன்னு பாருங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்து உள்ளது. இதேபோல தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருக்கிறார்.
வேப்பிலைக்கு இயற்கையாகவே மருத்துவ குணம் இருப்பதால் பலரும் ரசம், துவையல் வைத்து சாப்பிட்டு வருகின்றனர். சிலர் இந்த வேப்பிலையை வீட்டின் முன்புறம் கட்டி தொங்க விட்டுள்ளனர். சிலர் வீடுகளுக்கு முன்பு கோலம் போட்டு மஞ்சள் மற்றும் குங்குமத்தை தெளித்து அதில் வேப்பிலை இலைகளை தூவி விட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனாவால் வேப்பிலைக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டு இருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு வேப்பிலை இலவசமாக கிடைக்கிறது. அதே நேரம் நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் வேப்பிலையை காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ளவர்கள் ஒரு கட்டு வேப்பிலையை 20 ரூபாய் கொடுத்து வாங்கி வருகின்றனர்.