'கொரோனா டெஸ்ட்ல 'நெகட்டிவ்'னு வந்தா... கொரோனா இல்லனு அர்த்தம் இல்ல!'... தமிழக சுகாதார செயலர் பீலா ராஜேஷ் விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Apr 04, 2020 10:26 AM

கொரோனா வைரஸ் தாக்கவில்லை என சோதனை முடிவுகள் வந்தாலும் அதை முழுவதும் நம்ப முடியாது என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

tn health secretary beela rajesh important statement on covid19

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொரோனா தொற்று குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் கொரோனா அறிகுறி உள்ளவர்களை சோதிக்கும்போது முதலில் நெகட்டிவ் என வந்தாலும், அதன் பின் அது பாசிட்டிவ் என எப்போது வேண்டுமானாலும் மாறலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே, நெகட்டிவ் என வந்தவர்களையும் 28 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பது அவசியமாகிறது என்றும் அவர் தன் பதிவில் கூறியுள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் இன்னும் 484 பேரின் சோதனை முடிவுகள் வரவேண்டி இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் 3 ஆயிரத்து 684 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 411 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த 411 பேரில் 364 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.