“இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே மளிகை, காய்கறிகள் வாங்க மக்களுக்கு அனுமதி!”.. 144 உத்தரவால் சேலத்தில் கெடுபிடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 09, 2020 08:38 AM

சேலத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே மளிகை, காய்கறிகள் வாங்க மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Salem people will be allowed for every 5 days only

இன்று முதல் சேலத்தில் 144 தடை உத்தரவு விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்படுவதாகவும், இந்த ஊரடங்கு உத்தரவை கடுமையாக கடைபிடிக்கப்படவும் சேலத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதனால் காய்கறி, மளிகை வாங்க செல்லும் இருசக்கர வாகனங்களை வண்ணங்கள் மூலம் அடையாளப்படுத்தவும் காவல்துறை முடிவு செய்துள்ளது. இதனால் மீண்டும் மீண்டும் மக்கள் வெளியே வருவதற்கான சமவாய்ப்புகள் கணிசமாக குறையும் என்கிற நோக்கில் இந்த புதிய திட்டம் அமலுக்கு வருவதாக தெரிகிறது.