'இந்த' மாவட்டங்களில் 'கனமழை' பெய்யும்... வானிலை ஆய்வு மையம் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Dec 25, 2019 12:25 AM

அடுத்த 2 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Thanjai, Nagai and Tiruvarur districts get some good rain

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குனர் புவியரசன், ''வளிமண்டல சுழற்சி நிலவுவதால் அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்,'' என்றார்.

இன்று காலை முதல் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.