இந்த மாவட்டங்களில் எல்லாம்... கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 22, 2019 07:19 PM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக 25-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

weather update for tamilnadu and puducherry in chennai imd

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதேபோல் வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.  அரபிக் கடலில், மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #RAIN #ALERT #CHENNAI #IMD #TN